மத்திய இடைக்காலப் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர்..!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்கிறார். மொரார்ஜி தேசாய்க்கு பிறகு, தொடர்ந்து 6 முறை தாக்கல் செய்யும் பெருமையை நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் நிதியமைச்சர்கள் அருண் ஜேட்லி, ப.சிதம்பரம், யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் மட்டுமே இதுவரை தொடர்ந்து 5 முறை பட்ஜெட் தாக்கல் செய்திருக்கின்றனர்.நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை 11 மணிக்கு நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார்.
இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பிஎம் கிசான் திட்டத்தில் உதவித்தொகை ரூ.6,000 இருந்து ரூ.8,000 ஆக உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




