தண்ணீருக்கு பதிலாக தெரியாமல் ஆசிட்டை குடித்த கிரிக்கெட் வீரர் மாயங் அகர்வால்
விமான பயணத்தின் பொழுது ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாக இந்திய கிரிக்கெட் வீரர் மாயங் அகர்வால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சோதனையில் மாயங் அகர்வால் தண்ணீருக்கு பதிலாக ஆசிட்டை குடித்தது தெரிய வரவே தற்போது அபாய கட்டத்தை தாண்டியுள்ளார்.
அந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெரும் புகைப்படத்தை மாயங் அகர்வால் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் தற்போது நலமாக உள்ளதாகவும் மீண்டும் வர தயாராகி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





