வெள்ள நிவாரணம் ரூ.6,000 நாங்க கொடுத்தது.. அண்ணாமலை பேச்சால் பரபரப்பு..!
தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக அரசு வழங்கிய 6 ஆயிரம் ரூபாய் நிவாரணம் மத்திய அரசுடையது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பேருந்து நிலையம் அருகே பொதுமக்கள் மத்தியில் பேசியவர் பாசனத்திற்கு தண்ணீர் இன்றி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு நீர் ஆதாரங்களை திருப்ப எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தார்.
தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக அரசு வழங்கிய தலா 6,000 ரூபாய் நிவாரணம் மத்திய அரசு நிதி என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.





