பூஜையில் பங்கேற்காதவரை அரை நிர்வாணமாக்கிய மாணவர்கள்..!
கர்நாடகாவில் அம்பேத்கர் பூஜையில் பங்கேற்காத பள்ளி மாணவனை அரை நிர்வாணமாக்கி தலையில் அம்பேத்கர் படத்துடன் ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள பி யு சி மாணவர் விடுதி இயங்கி வருகிறது.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மற்றும் குடியரசு தின விழாக்களின் பொழுது அம்பேத்கர் படத்திற்கு மரியாதை செலுத்துவது வழக்கம். இந்த நிலையில் குடியரசு தினத்தன்று அம்பேத்கர் உருவப்படத்தை வைத்து மரியாதை செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு விடுதியில் தங்கும் மாணவர் ஒருவர் பங்கேற்காமல் அவரது சொந்த வேளையிலே ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சக விடுதி மாணவர்கள் அந்த மாணவனை தாக்கி அரை நிர்வாணமாக்கி அவரது தலையில் அம்பேத்கர் உருவப்படத்தை வைத்து விடுதியை சுற்றியுள்ள சாலையில் ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர்.
இதனை பார்த்த சிலர் தங்களது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இந்த பதிவு வைரல் ஆனதை தொடர்ந்து மாவட்ட போலீசார் உடனடியாக சம்பந்தப்பட்ட மாணவனை அணுகி புகாரை பதிவு செய்து தாக்குதல் நடத்தி அரை நிர்வாணப்படுத்தியதாக விடுதி மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





