அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்த பஞ்சாயத்து அலுவலக கட்டிடத்தில் விரிசல்..!
திருச்சி திருவெரம்பூரில் அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்த புதிய ஊராட்சி அலுவலக கட்டிடத்தில் சுற்றுச்சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
திருவரம்பூர் பகுதிக்கு உட்பட்ட ஊராட்சியில் 20 லட்சம் ரூபாய் செலவில் புதிய சாலை அமைக்க பூமி பூஜை மற்றும் பஞ்சாயத்து அலுவலக திறப்பு விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் கலந்து கொண்டார்.
இதில் அமைச்சர்களால் திறந்துவைக்கப்பட்ட 24 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பஞ்சாயத்து அலுவலக கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிகழ்வு சுற்று வட்டார மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





