சிமெண்ட் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து..!
தென்காசி அருகே சிமெண்ட் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஆறு பேர் உயிரிழந்தனர். புளியங்குடி அருகே சிங்கிலிபட்டிக்கும் பண்ணையாபுரத்திற்கும் இடையே அதிகாலையில் சென்று கொண்டிருந்த லாரி எதிரே குற்றாலத்தில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்த காருடன் நேருக்கு நேர் மோதியது.
இந்த கோர விபத்தில் கார் நொறுங்கியதில் அதில் பயணித்த ஆறு பேர் உயிரிழந்தனர். காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் உடல்களை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியை சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கார் ஓட்டுநர் நள்ளிரவு நேரத்தில் கண் அயர்ந்ததால் விபத்து நேரிட்டதாக தெரியவந்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





