பொங்கல் விழாவில் பரோட்டா சாப்பிடும் போட்டி.. 3 நிமிடத்தில் 17 பரோட்டா..!
விழுப்புரம் செஞ்சி எடுத்த அன்னமங்கலத்தில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா போட்டியில் மூன்றே நிமிடங்களில் 17 பரோட்டாக்களை சாப்பிட்டு அசத்தியுள்ளார் ஒரு மாணவர்.
கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்ற நிலையில் செஞ்சி கோட்டை விழா அனைவரையும் அசர வைத்தது. பரோட்டா சாப்பிடும் போட்டி பலரையும் கவர்ந்தது.
ஆண், பெண் என பேதமின்றி மாணவ, மாணவிகள் போட்டி போட்டுக் கொண்டு பரோட்டாக்களை வெளுத்து வாங்கினர். அதில் ஒரு மாணவர் வெறும் மூன்றே நிமிடங்களில் 17 பரோட்டாக்களை மின்னல் வேகத்தில் சாப்பிட்டு பரோட்டா சூரியை வென்று விட்டார்.





