--- --:--:-- --

தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்த தாய்.. ஆற்றில் சடலமாக கிடந்த மகன்..!

9

ர்மபுரி அருகே தூக்கிட்ட நிலையில் தாயும் ரத்த காயங்களோடு ஆற்றில் மகனும் மர்மமான முறையில் உயிரிழந்த கிடந்தது சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

46 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண்ணும் ரத்த காயங்களுடன் இளைஞர் ஒருவரும் ஆற்று நீரில் சடலமாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு வந்த போலீசார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

இது தொடர்பான விசாரணையில் உயிரிழந்த இருவரும் செல்வி மற்றும் அவரது மகன் மோகன்ராஜ் என தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon