கமலுடன் காதல் தோல்வி, இறப்பதற்கு சில நாள் முன் ஸ்ரீவித்யா சொன்ன விஷயம்
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் மறைந்த நடிகை வித்யா மற்றும் கமல்ஹாசன் இருவரும் கொடுத்த வெவ்வேறு பேட்டிகள் வைரலாகி வருகிறது.
கமல்ஹாசன் ஒரு பேட்டியில் ஸ்ரீவித்யா புகைப்படத்தை பார்த்துவிட்டு, அபூர்வ ராகங்கள் படத்தில் நடிக்கும் போது எனக்கு 19 வயது, அந்த படத்தில் நடித்தபோது நான் திறமையான நடிகன் என்பதை எனக்கு உணர்த்தியதே ஸ்ரீவித்யா தான்.
அவர் எனக்கு தோழி மட்டுமல்ல எனக்கு காதலியும் தான் அதில் எந்த சந்தேகமும் இல்லை. எங்களுக்குள் காதல் கடைசி வரை இருந்தது, அது கல்யாணத்தில் தான் முடிய வேண்டும் என்ற அவசியம் இல்லை என பேசியிருப்பார்.
ஸ்ரீவித்யா ஒரு பேட்டியில், கமலும் தானும் உருகி உருகி காதலித்து வந்தாலும், இருவருடைய எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தன்னுடைய அம்மா அந்த காதலுக்கு முட்டுக்கட்டை போட்டதால் இருவரும் பிரிந்து விட்டதாக அவர் கூறினார்.
குட்டி பத்மினி ஒரு பேட்டியில், ஸ்ரீவித்யா, கமல் இருவரும் காதலித்தனர். ஆனால் அவர்களது காதல் சில காரணங்களால் திருமணத்தில் முடியவில்லை. ஸ்ரீவித்யா இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் அவரை சந்தித்து பேசினேன்.
அப்போது கொச்சி வா என்றார், நானும் சென்று பார்த்தேன். அப்போது தான் அவர் மருத்துவமனையில் கேன்சர் பாதிக்கப்பட்டு இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறார் என்பதை அறிந்தேன்.
என்னை பார்த்ததும் என்னை கட்டி அணைத்து அழுத ஸ்ரீவித்யா, நான் இன்னும் 2 அல்லது 3 நாட்களில் இறந்து விடுவேன், எனக்கு கேன்சர் முற்றிவிட்டது, எனக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை என்று தன் கையைப் பிடித்து அழுததாக அவர் கூறியுள்ளார்.





