--- --:--:-- --

நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு..!

2

னவரி 4 மற்றும் 5ம் தேதிகளில் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தென்கிழக்கு அரபிக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

 

அதேபோல தென்மேற்கு வங்க கடல் பகுதியில் இலங்கைக்கு தெற்கே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

 

ஜனவரி 4 மற்றும் 5ம் தேதிகளில் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிக அளவில் லேசான பனிமூட்டமும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

குமரி கடல், மன்னார் வளைகுடாவில் உள்ள பகுதிகளில் சூறைக்காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Right Menu Icon