கேக்கிலிருந்த செய்தித்தாள்.. அதிர்ச்சியான வாடிக்கையாளர்..!
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் பேக்கரி கேக்கில் செய்தித்தாள் துண்டு கண்டுபிடிக்கப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் அந்த வாக்கரில் குழந்தைகளுக்கு புட்டிங் கேக் வாங்கியுள்ளார். அதனை சாப்பிட முற்பட்ட பொழுது கேக்கில் செய்தித்தாள் துண்டு இருப்பதை கண்டறிந்தார்.
இது குறித்து கடை ஊழியரிடம் கேட்ட பொழுது புத்தாண்டு நேரம் என்பதால் கவனக்குறைவாக நடந்திருக்கலாம் என ஊழியர் அலட்சியமாக பதில் அளித்துள்ளார். கேக்கில் இருந்து செய்தித்தாள் எடுக்கப்பட்ட காட்சியை வாடிக்கையாளர் சமூக வலைதளங்களில் பகிர்ந்த நிலையில் அது தற்பொழுது வைரலாகி வருகிறது.
இது குறித்து உணவு பாதுகாப்புத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வலுத்து வருகிறது.





