--- --:--:-- --

லேப்டாப்பை திரும்ப கேட்டதால் இளைஞருக்கு நடந்த துயரம்..!

8

ள்ளக்குறிச்சி அருகே லேப்டாப்பை திரும்ப கேட்டு அவதூறாக பேசிய இளைஞரை கொலை செய்த வழக்கில் நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் புறவழி சாலையில் மர்மமான முறையில் இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்டது.

 

இது குறித்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் கொலையானவர் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிவா என்பது தெரியவந்தது.

 

இதனையடுத்து அவரது செல்போனை ஆய்வு செய்த போலீசார் சிவா அடிக்கடி தொடர்பில் இருந்த திருக்கோவிலூர் சேர்ந்த பரணிதரணையும் வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேரையும் கைது செய்தனர்.

 

விசாரணையில் பழுது நீக்க வந்த லேப்டாப்பை தரணிதரணிடம் வாங்கிய பத்தாயிரம் ரூபாய் கடனுக்காக சிவா வழங்கியதும் அதனை திருப்பி கேட்டு அவதூறாக பேசியதால் அவரை கொலை செய்ததும் தெரிய வந்தது. இந்த நிலையில் தொழில்நுட்ப உதவியுடன் குற்றவாளிகளை கண்டறிந்த போலீசாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

 

Right Menu Icon