--- --:--:-- --

அதிவேகமாக வந்த சிறுவனால் ஒருவருக்கு நேர்ந்த சோகம்..!

7

சிவகங்கையில் 16 வயது சிறுவன் இருசக்கர வாகனத்தை ஒட்டி ஏற்படுத்திய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். காரைக்குடி அருகே உள்ள செஞ்சி பகுதியை சேர்ந்த மனோகரன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் 12 மற்றும் 16 வயதுடைய இரு சிறு சிறுமியுடன் சிவகங்கை அருகே உள்ள ஒண்டிப்புள்ளி திரு பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

 

அப்பொழுது சத்தந்தி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் இருசக்கர வாகனத்தை அதிவேகமாக ஓட்டி வந்த பொழுது எதிரே வந்த மனோகரனின் பைக் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் மனோகரன் உயிரிழந்தார்.

 

அவருடன் சென்ற இரு சிறுமிகள் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பைக்கை ஓட்டி வந்த 16 வயது சிறுவனும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இது குறித்த புகாரில் 16 வயது சிறுவனுக்கு இருசக்கர வாகனத்தை கொடுத்த வெளிநாட்டில் உள்ள சிறுவனின் தந்தை மற்றும் சிவகங்கையில் உள்ள தாயார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

Right Menu Icon