--- --:--:-- --

பேருந்து படியில் மாணவர்கள் தொங்கிக்கொண்டே செல்வதை தடுக்க புதிய முயற்சி..!

2

பேருந்துகளின் படிக்கட்டுகளில் பள்ளி மாணவர்கள் தொங்கிக் கொண்டே பயணம் செய்வதை தடுப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள புதிய முயற்சி கவனம் பெற்றுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அரசு பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

 

கீழே விழுந்து மாணவர்கள் உயிரிழக்கும் சம்பவமும் அரங்கேறி இருக்கிறது. மாணவர்கள் சிலர் அதை கண்டு கொள்வதில்லை. படிக்கட்டுகளில் ஓரம் இருக்கும் இருக்கைகள் ஜன்னல்கள், தகரம் கொண்டு அடைக்கப்பட்டன.

 

இந்த சோதனை முயற்சி மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளதால் காஞ்சிபுரம் இயங்கப்படும் அனைத்து நகர பேருந்துகளிலும் படிக்கட்டுகளுக்கு அருகே உள்ள ஜன்னல் கம்பிகள் தகரத்தை கொண்டு மூடும் பணி நடைபெற்று வருகிறது.

 

Right Menu Icon