தனி மனித சுதந்திரத்திற்கு ஆபத்து : முன்னாள் மத்திய அமைச்சர்
புதிய தண்டனை சட்டம் தனிமனித சுதந்திரத்திற்கு ஆபத்தை விளைவிக்க கூடும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் நாடாளுமன்றத்தில் நிறைவேறி குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ள போன்று புதிய குற்றவியல் சட்டம் மிகவும் அபாயகரமானது என விமர்சித்துள்ளார்.
ஏழை, உழைக்கும் வர்க்கம் மற்றும் நலிந்த பிரிவினரை புதிய தண்டனை சட்டம் ஒடுக்கும் கருவியாக மாறும் என அவர் சாடியுள்ளார். இந்த சட்டத்தில் சரியான செயல்முறையை வலுப்படுத்துவதற்கு பதிலாக சுதந்திரம் மற்றும் தனி சுதந்திரம் ஆகியவற்றை கடுமையாக கட்டுப்படுத்தும் பல விதிகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.





