உயரத்தில் கட்டப்பட்ட கயிறு.. பணியில் இருக்கும் போதே பறிபோன உயிர்..!
சென்னை வடபழனியில் உள்ள காவலர் குடியிருப்பில் பிளம்பிங் வேலை செய்து வந்த தொழிலாளி ஒருவர் 20 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது சென்னை மிருகம்பாக்கத்தை சேர்ந்தவர் அசோக்.
இவர் வடபழனி காவல் குடியரசுள்ள காவல் உதவி ஆய்வாளர் ஒருவரின் வீட்டிற்கு குடிநீர் குழாய் பழுது பார்ப்பதற்காக சென்றிருக்கிறார். அங்கு 20 அடி உயரத்தில் சாரல் கட்டி வேலை செய்து கொண்டிருந்தார். திடீரென கயிறு அறுந்து கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தார்.
உடனே அந்த குடியிருப்பு வாசிகள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து வடபழனி போலீசார் கூலித் தொழிலாளியின் மரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





