--- --:--:-- --

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எப்போதும் ஏமாற்றக்கூடியவர்: தமிழ் மகன் உசேன்

4

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் எப்போதுமே ஏமாற்றக்கூடியவர் என அதிமுக அவை தலைவர் தமிழ் மகன் உசேன் விமர்சித்துள்ளார். சென்னையை அடுத்த ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் தொகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிமுக சார்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

அதிமுகவின் அவை தலைவர் தமிழ் மகன் உசேன் இலவச மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் என்று கூறிவிட்டு தற்போது ரேஷன் உள்ளவர்களுக்கு மட்டும் தான் என முதலமைச்சர் கூறி வருவதாக விமர்சித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon