--- --:--:-- --

பெங்களூருவில் 28 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!

6

பெங்களூருவில் 28 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிகழ்வு அரங்கேறியுள்ளது. கர்நாடகா மாநிலம் தலைநகர் பெங்களூருவில் சர்ஜாபுரம், ஆனைக்கல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 28 பள்ளிகளுக்கு ஈமெயில் மூலம் அடையாளம் தெரியாத சிலர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

 

அதில் பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது எனவும் அது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் என மிரட்டல் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

 

இதனை அறிந்த பெற்றோர்கள் பள்ளிக்குள் புகுந்து வருவதால் அங்கு பதற்றம் நிலைமைக்கு வந்த தகவல் அறிந்த வெடிகுண்டு தடுப்பு பிரிவினரை அனைத்து பள்ளி வளாகங்கள் கழிவறைகள் உள்ளிட்ட இடங்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon