--- --:--:-- --

ஜாதி, மதம் பற்றி ஏன் வாக்கு சேகரிக்கிறார்கள்? பிரியங்கா காந்தி கேள்வி

2

தேர்தலில் ஜாதி மதம் குறித்து ஏன் பேசுகிறார்கள் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உரையாற்றினார்.

 

மக்களுக்காக வேலை செய்யும் உண்மையான தலைவர் ஜாதி மதத்தை வைத்து வாக்கு கேட்க மாட்டார் என கூறியவர் அவருடைய உழைப்பின் அடிப்படையில் மக்களிடம் வாக்கு சேகரிப்பார் என பாஜகவை சாடினார். கடந்த 18 ஆண்டுகளாக பிரத்யேக தேசத்தில் பாஜகவினர் ஆட்சி செய்கிறார்கள்.

 

ஆனால் அவர்கள் தாங்கள் செய்த எந்த வேலையும் கூறி வாக்கு கேட்பதில்லை. மாறாக சாதியை பற்றி பேசுகிறார்கள் என கடுமையாக சாடினார்.

 

ராஜஸ்தான் தலைநகர் தொண்டர்கள் என காங்கிரஸில் அனைவரும் ஒருங்கிணைந்து போராட்டத்தில் இறங்கியதால் பாஜக முற்றிலும் பிளவுப்பட்டுள்ளது என்றும் ராஜஸ்தானின் பெரும்பான்மை காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் எனவும் பிரியங்கா காந்தி நம்பிக்கை தெரிவித்தார்.

 

Right Menu Icon