வைகை அணையின் நீர்மட்டம் கிடு கிடுவென உயர்வு.. ஐந்து மாவட்ட கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..!
தொடர் மழை காரணமாக முழு கொள்ளவை எட்டிய வைகை அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு இருக்கும் நிலையில் 5 மாவட்டங்களில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே அமைந்துள்ள வைகை அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் வைகை அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து 43 அடியிலிருந்து 70 அடியை தொட்டது.
இதனால் அணையின் பாதுகாப்பு கருதி நேற்று இரவு முதல் வைகை அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் 4,271 கனஅடி நீர் தண்ணீர் பிரதான ஏழு பெரிய மதகுகள் வழியாக உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால் தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டங்களில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. வைகை ஆற்றில் இறங்கவோ, ஆற்றே கடந்தோ போக வேண்டாம் என மாவட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





