தீபாவளி கொண்டாட்டத்திற்காக சொந்த ஊர் செல்லும் மக்கள்.. கொத்துக்கொத்தாக கிளம்பும் பேருந்துகள்..!
தீபாவளி பண்டிகை கலைகட்ட தொடங்கிய நிலையில் சென்னையில் இருந்து ஏராளமானோர் இன்று சிறப்பு பேருந்துகள் மூலம் சொந்த ஊருக்கு செல்கின்றனர். மழை மற்றும் வாகனங்கள் நெரிசல் காரணமாக பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
. சென்னையில் இருந்து நேற்று வரை ஒரே நாளில் மட்டும் 550 சர்வ பேருந்துகள் உட்பட மொத்தம் 3,465 பேருந்துகள் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்து தீபாவளியை கொண்டாட தங்கள் ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.
இரண்டாவது நாளான இன்று 3.995 அரசு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி ஐந்து கோயம்பேடு உள்பட ஐந்து இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. எனினும் சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





