கிளினிக்கில் ஊசி போட்ட சிறுவன்.. சில நாட்களில் அழுகிய உடல்..!
தவறான சிகிச்சையால் பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவத்தில் யுனானி மருத்துவரை போலீசார் கைது செய்தனர். சென்னை மேற்கு சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த ஸ்ரீநிவாஸ் என்பவரின் 17 வயது மகனான அஷ்வந்த்திற்கு திடீரென உடல் நலக் கோளாறு ஏற்பட்டது.
அருகில் உள்ள தனியார் கிளினிக்கிற்கு சிறுவனை பெற்றோர் அழைத்து சென்ற பொழுது அங்கு அஸ்வந்தை பரிசோதித்த மருத்துவர் ஷேக்முகமது சிறுவனுக்கு ஊசி செலுத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் அஸ்வந்திருக்கும் ஊசி போட்ட இடத்தில் கருப்பாக பரவியதையடுத்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அசோக் நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று காண்பித்தனர்.
அறுவை சிகிச்சை செய்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்ததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மகனுக்கு தவறான சிகிச்சை அளித்ததால் தான் இறந்ததாக கூறி சிறுவனின் தந்தை அமைச்சர் மா.சுப்ரமணியனை நேரில் சந்தித்து புகார் அளித்தார்.
அதன் பெயரில் மருத்துவர் ஷேக் முகமதை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய பொழுது யுனானி மருத்துவம் படித்துவிட்டு நோயாளிகளுக்கு ஆங்கில மருந்துகளை அளித்து சிகிச்சை அளித்தது தெரிய வந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





