--- --:--:-- --

கட்டிட பணியின் போது நடந்த அசம்பாவிதம்.. இடிந்து விழுந்த மேற்கூரை..!

8

சாத்தூர் அருகே கட்டிட பணியின் பொழுது சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 6 தொழிலாளர்கள் உட்பட படுகாயம் அடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சிங்கப்பள்ளி பகுதியில் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த ஜனகன் என்பவர் புதிதாக கட்டிடம் கட்டி வருகிறார்.

 

தொழிலாளர்கள் கட்டிட பணிகளில் ஈடுபட்டிருந்தபொழுது கட்டடத்தின் மேல் தளம் முழுவதுமாக இடிந்து விழுந்தது. இதனால் தொழிலாளர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கினார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கட்டிட இடிப்பாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.

 

இந்த விபத்தில் கட்டிட பணிகளில் ஈடுபட்டிருந்த ஷங்கர், கணேசன், ஜெய்சங்கர், முனியாண்டி உள்ளிட்ட ஆறு தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon