பிரியாணிக்காக நடந்த கொலை.. உரிமையாளருக்கு விழுந்த கத்தி குத்து..!
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் பிரியாணி கடை உரிமையாளர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். நேற்று இரவு கடையில் இருந்து வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் பிரியாணி கடை உரிமையாளர் கண்ணனை நீதிமன்றம் அருகே வழிமறித்த மர்மநபர்கள் கல்லால் அடித்தும், கத்தியால் தலை முழுவதும் சிதைத்தும் தப்பியுள்ளனர்.
ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் கடந்த ஆகஸ்ட் மாதம் தகராறில் ஈடுபட்டதாக சிலர் மீது கண்ணன் புகார் அளித்ததும் மறுநாளே அவர்கள் கண்ணனை தாக்கியதும் தெரிய வந்தது.
இந்நிலையில் அதேபோன்ற சம்பவத்தில் கண்ணன் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





