மகளிர் உரிமை தொகை திட்டம் 11 லட்சம் பேர் மேல்முறையீடு..!
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்காக தமிழகம் முழுவதும் 11 லட்சம் மேல்முறையீடு மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள் மேல் முறையீடு செய்வதற்கான கால அவகாசம் கடந்த 24 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.
இந்த நிலையில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்காக தமிழகம் முழுவதும் 11 லட்சம் மேல்முறையீட்டு மனுக்கள் பெறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவற்றை சார் ஆட்சியர், துணை ஆட்சியர், வருவாய் போட்ட அலுவலர்கள் பரிசீலித்து தருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த மாத இறுதிக்குள் விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியான மக்களுக்கு வரும் 15-ம் தேதி முதல் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும் என தமிழக அரசு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விதிகளை பூர்த்தி செய்ய ஒரு மனு கூட விடுபட்டு விடக்கூடாது என்ற அடிப்படையில் பணியாற்றிட அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





