மகளிர் உரிமை திட்டம்.. பயனாளிகள் சேர்ப்பு, தகுதியற்றவர்கள் நீக்கம்..!
மகளிர் உரிமை தொகை திட்டத்தில் கூடுதல் பயனாளிகளாக 5,41 பேர் இணைக்கப்பட்டு நடப்பு மாதத்திற்கான தொகை நேரடியாக வங்கியில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மகளிர் உரிமை தொகை திட்டம் குறித்து செய்தி வெளியிட்டுள்ள தமிழக அரசு அக்டோபர் மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை பணியாளர்களின் வங்கி கணக்கில் ஒரு நாள் முன்னதாகவே 14ஆம் தேதி வரவு வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல்முறையீடு செய்ததில் தகுதியான பயனாளர்களாக தேர்வு செய்யப்பட்ட 5,041 பேர் புதிதாக இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பயனாளர்களில் சிலர் உயிரிழந்தவர்கள் தகுதியற்றவர்கள் என கண்டறியப்பட்டு 80,833 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் எனவும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.





