திமுக வாக்கு சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் – முதலமைச்சர் பங்கேற்பு
திருவண்ணாமலையில் வரும் 22ம் தேதி அன்று திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்ற உள்ளார்.
வடக்கு மண்டலத்திற்குட்பட்ட 13 திமுக மாவட்டங்களுக்கு புதிதாக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
இந்த வாக்குச்சாவடி பொறுப்பாளர்களின் பயிற்சி பாசறை கூட்டம் வரும் 22 ஆம் தேதி அன்று திருவண்ணாமலையில் நடைபெற உள்ளது. இதில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்ற உள்ளதாகவும் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.





