--- --:--:-- --

வீட்டிற்குள் பைக் உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

7

சூர் அருகே வீட்டில் எலக்ட்ரிக் பைக் பேட்டரிக்கு சார்ஜ் போட்டபொழுது பேட்டரி வெடித்ததால் பரபரப்பு நிலவியது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை சேர்ந்த மஞ்சுளா என்பவர் வியாபாரத்தை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார்.

 

தனது எலக்ட்ரிக் பைக்கை தனியாக எடுத்து வீட்டிற்குள் சார்ஜ் போட்டுள்ளார். எதிர்பாராத விதமாக பேட்டரி வெடித்ததில் வீட்டில் உள்ள பொருட்கள் தீயில் எரிந்துள்ளது. அருகில் இருந்தவர்கள் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த அனைவரையும் பத்திரமாக மீட்டனர்.

 

இது குறித்து மஞ்சுளா எலக்ட்ரிக் பைக் வெடித்தது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

Right Menu Icon