சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.400..!
தெலுங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் பிஆர்எஸ் கட்சி எரியும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 400 ரூபாய்க்கு தரப்படும் என பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளது.
5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கானா மாநிலத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இங்கு ஆளும் கட்சியான சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் காங்கிரஸ் பாஜகவின் கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் பிஆர்எஸ் கட்சி தலைவரும் முதலமைச்சர் ஆன சந்திரசேகர ராவ் புதிய தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் 400 ரூபாய்க்கு தரப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளது.





