ஆட்டோ டிரைவரின் வங்கி கணக்கில்.. திடீரென ஒன்பதாயிரம் கோடி டெபாசிட்..!
சென்னையில் ஆட்டோ டிரைவரின் வங்கி கணக்கில் 9,000 கோடி டெபாசிட் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரூ.15 மட்டுமே இருந்த ஆட்டோ ஓட்டுநரின் வங்கி கணக்கிற்கு அதிக பணம் வந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
டெபாசிட் செய்த பணத்தை திரும்ப பெற்ற தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி தவறுதலாக டெபாசிட் செய்ததாக வங்கியின் தலைமை அலுவலகத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. 9,000 கோடியில் ₹21,000 பணம் போக எஞ்சிய தொகையை திரும்ப பெற்றதாக டிஎம்பி வங்கி விளக்கம் அளித்துள்ளது.





