--- --:--:-- --

ஆட்டோ பயண கட்டணம் 12 வாரங்களில் மாற்றியமைப்பு..!

4

மிழகத்தில் ஆட்டோ பயண கட்டணம் 12 வாரங்களில் மாற்றியமைக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 

இது தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கா பூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆட்டோ பயண கட்டணங்களை மாற்றி அமைப்பது தொடர்பாக தொழிற்சங்கங்கள் ஓட்டுநர்கள் நுகர்வோர் அமைப்புகளிடமும் கருத்துக்களை கேட்பதற்கான போக்குவரத்து துறை இணை ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

ஆட்டோ பயண கட்டணம் தொடர்பான இக்குழு அளித்த பரிந்துரை அரசின் பரிசீலனையில் உள்ளதாகவும் இது தொடர்பாக 12 வாரங்களில் இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் அரசு சார்பில் குறிப்பிட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

 

அதே சமயம் திருத்தி அமைக்கப்படும் கட்டணம் காரணமாக பாதிக்கப்படுவோர் நீதிமன்றத்தை நாடலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

 

Right Menu Icon