திருப்பூரில் பழங்கால பெரிய மண்பானை கண்டெடுப்பு! புதையலுக்கு பதில் எலும்புக்கூடு இருந்ததால் பரபரப்பு..!!
அமாவாசை நாளில் திருப்பூரில் பகீர்!
எலும்புகளுடன் கிடைத்த பழங்காலப்பானை..!!
முழு விவரங்கள் இதோ!
திருப்பூரில், பாதாள சாக்கடை பணிகளுக்காக பள்ளம் தோண்டப்பட்டபோது, பெரிய மண்பானை கிடைத்தது. அதில் புதையல் இருக்கும் என்று கருதப்பட்ட நிலையில், எலும்புக்கூடு சிக்கியிருப்பது, ஆச்சரியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட தாராபுரம் ரோடு, 44-வது வார்டு பகுதியில், தற்போது பாதாளசாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக இன்று காலை பொக்லீன் கொண்டு பள்ளம் தோண்டும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மண்ணில் புதைந்திருந்த பொருள் ஒன்று தென்பட்டது.

இதையடுத்து மிகவும் கவனமாக அப்பகுதியில் பள்ளம் தோண்டினர். இதில், பெரிய அளவில் பழங்கால மண்பானை இருப்பது தெரியவந்தது. இதனால், பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சி ஊழியர்கள் திகைத்தனர். உடனடியாக இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தினர்.
இதனிடையே, பாதாள சாக்கடை தோண்டும் பணியில் பெரிய பழங்கால மண்பாணை கிடைத்த தகவல், காட்டுத்தீயாக திருப்பூர் நகரில் பரவியது. இதனால் பரபரப்படைத்த மக்கள் பலரும், என்னவென்று பார்ப்பதற்காக சம்பவ இடத்திற்கு வரத் தொடங்கினர். இதன் காரணமாக அங்கு நெரிசல் உண்டானது.
இதனிடையே, மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜிகிரியப்பனாவர் அப்பகுதி வந்து பார்வையிட்டார். மண்பானையில் இருப்பது புதையல் அல்ல, பழங்காக எலும்புகூடு என்பது தெரியவந்தது. இதைப்பார்த்து அனைவரும் ஆச்சரியப்பட்டனர். இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் வருவாய்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். வருவாய்த்துறையினரும் தாராபுரம் ரோடு பகுதிக்கு விரைந்தனர்.
திருப்பூரில் பாதாள சாக்கடை தோண்டும் போது கிடைத்த பெரிய மண்பானையில் பொன்னும் பொருளும் இருக்குமோ என்று ஆச்சரியத்துடன் வந்த பொதுமக்கள், எலும்புக்கூடு இருப்பது கண்டு திகைத்தனர். பழங்காலத்தில் இறந்தவர்களை இப்படி புதைக்கும் வழக்கம் இருந்திருக்கலாம்; அவர்களில் யாருடையதாவதாக இது இருக்கலாம் என்று பலரும் பேசிக் கொண்டனர்.
கிடைத்த மண்பாணை குறித்து உரிய மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுக்கு பிறகே இதுகுறித்த முழு விவரங்களும் தெரியவரும் என்று வருவாய்த்துறை வட்டாரங்களில் தெரிவித்தனர். எது எப்படியானாலும், நிறைந்த அமாவாசை நாளில் திருப்பூரில் மண்பாண்டப் புதையல் கிடைத்ததும் அதில் எலும்புக்கூடு இருந்ததும் பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




