வயிற்றில் உள்ள இறந்த குழந்தை.. மருத்துவர்களின் அலட்சிய பதில்..!
விழுப்புரத்தில் 7 மாத கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் இறந்து போன குழந்தையை அகற்றாமல் மருத்துவர்கள் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள பகுதியை சேர்ந்த தீபா ஏழு மாத கர்ப்பிணியாக உள்ளார். தாயும், குழந்தையும் நலமாக இருப்பதாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் தெரிவித்த நிலையில் குழந்தை அசைவு இல்லை என கூறியுள்ளார்.
ஆனால் தனியாரில் ஸ்கேன் செய்த போது இரண்டு நாட்களுக்கு முன்பே குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் தீபா அனுமதிக்கப்பட்ட நிலையில், மருத்துவர்கள் அலட்சியம் காட்டுவதாக கர்ப்பிணியின் கணவர் பார்த்தசாரதி குற்றம் சாட்டியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





