ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2 பாட்டில் கடுகு எண்ணெய் விநியோகம்..!
ரேஷன் கார்டு தாரர்களுக்கு இரண்டு பாட்டில் கடுகு எண்ணெய் வழங்கப்படும் என்று ஹரியானா அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு சார்பில் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு இரண்டு பாட்டில் கடுகு எண்ணெய் வழங்கப்படுவது ஹரியானாவில் வரவேற்பை பெற்றுள்ளது. குடும்ப ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கும் மேல் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு கடுகு எண்ணெய் வழங்கப்படும் என்றும் மின்கட்டணத்திலும் தள்ளுபடி வழங்கப்படும் எனவும் ஹரியானா அரசு தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





