--- --:--:-- --

ரயில்வே துறையில் வேலை எனக் கூறி ஜோடியாக பணத்தை சுருட்டி திருட்டு..!

1

யில்வே துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 56 லட்ச ரூபாய் மோசடி செய்த புகாரில் பெங்களூருவை சேர்ந்த தம்பதியை கன்னியாகுமரி காவல்துறையினர் கைது செய்தனர்.

 

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை பகுதியை சேர்ந்த அபிஷா என்பவர் ஜோயல் தேவா என்பவரை திருமணம் செய்து வசித்து வருகிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து ரயில்வே துறையில் தங்களுக்கு தெரிந்த உயர் அதிகாரிகள் மூலம் வேலை வாங்கி தருவதாக கூறி கன்னியாகுமரியை சேர்ந்த சிலரிடம் பணம் வாங்கியுள்ளனர்.

 

அந்த வகையில் பிரணிதா என்பவர் உட்பட ஐந்து பேரிடம் இருந்து 56 லட்சம் ரூபாய் பெற்றுள்ளனர். ஆனால் வேலை வாங்கி தராததால் ஏமாற்றமடைந்தவர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். அதன் பெயரில் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பெங்களூரு சென்ற அபிஷா அவரது கணவர் ஜோயல் தேவா உட்பட மூன்று பேரை கைது செய்தனர்.

 

Right Menu Icon