அரசு பேருந்துக்கு வழி விடாமல் டான்ஸ் ஆடிய இளைஞர்கள்..!
தேனி அருகே மதுபோதையில் பேருந்தை வழிமறித்து நடனமாடிய இளைஞர்களை தட்டி கேட்டதால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியிலிருந்து வத்தலகுண்டு வரை செல்லும் அரசு பேருந்து பண்ணை மதுபோதையில் இருந்த இளைஞர்கள் வழிமறித்தனர். பின்பு பேருந்து வழிவிடாமல் இளைஞர்கள் நடனமாடிய நிலையில் விராலிபட்டியை சேர்ந்த வாலிபர்கள் இதனை தட்டி கேட்டனர்.
இதனால் இருதரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த கைகலப்பில் காயமடைந்த நான்கு பேர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சாலை முன்பு இளைஞர்கள் நடனமாடும் காணொளி சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.






