--- --:--:-- --

லண்டனில் கரூர் இளைஞர் துடிதுடித்து பலியான பரிதாபம்..!

3

ங்கிலாந்தில் உயிரிழந்த கரூர் இளைஞரின் உடல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ஏற்பாட்டில் சொந்த ஊருக்கு எடுத்துவரப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

 

குளத்துறை சேர்ந்த பி.டெக் பட்டதாரியான 39 வயது கனகராஜ் லண்டனில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த மாதம் 26 ஆம் தேதி அன்று அவர் தங்கி இருந்த வீட்டில் தடுமாறி கீழே விழுந்து தரையில் அடிபட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

 

ஆதரவின்றி தவித்த குடும்பத்தினர் பாஜக மாவட்ட தலைவர் செந்தில் நாதனை அனுப்பினார். அவர் அண்ணாமலையிடம் தெரிவித்ததை தொடர்ந்து லண்டனில் உள்ள நண்பர்கள் மூலமாக நடைமுறைகளை முடித்து உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கையை அண்ணாமலை மேற்கொண்டார்.

 

உடலை கரூர் எடுத்து வருவதற்கான செலவு மற்றும் கனகராஜ் குடும்பத்தினருக்கு உதவிடும் வகையில் நான்கு லட்சம் ரூபாயும் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon