வீட்டில் சுய பிரசவம்.. மறுகணமே நிகழ்ந்த கொடூர சம்பவம்..!
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் வீட்டிலிருந்து சுயபிரசவம் பார்த்த பெண் ஒருவர் தனக்கு பிறந்த ஆண் குழந்தையை கழுத்தை நெரித்திக் கொன்றதாக கூறப்படும் நிலையில் அதிக ரத்தப்போக்கு காரணமாக அவர் உயிரிழந்தார்.
பட்டுக்கோட்டையைச் சேர்ந்த நோயாளி செந்திலுக்கு திருமணமாகி மனைவி வசந்தியும் மூன்று பெண் குழந்தைகள், இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் 40 வயதில் வசந்தி ஆறாவதாக கர்ப்பம் தரித்த நிலையில் சுயப்பிரசவம் பார்த்ததாகவும் ஆண் குழந்தை பிறந்ததாகவும் கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் வசந்திக்கு ரத்தப்போக்கு அதிகரிக்கவே அக்கம் பக்கத்தினர் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் வழியில் அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது பிளாஸ்டிக் வாலி ஒன்றில் கழுத்து நெரிக்கப்பட்டு வாயில் துணியை வைத்து அடைத்த நிலையில் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. குடும்ப வறுமையின் காரணமாக பெற்ற குழந்தையை தாயே கொன்று இருக்கலாம் என கூறப்படுகிறது.






