குருவாயூரில் 85 கிலோ சர்க்கரை நேர்த்தி கடன் செலுத்திய ஓபிஎஸ்..!
தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள குருவாயூர் கோயிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். அப்போது தனது தோட்டத்தில் உள்ள கரும்பால் தயார் செய்யப்பட்ட 85 கிலோ சர்க்கரை பயன்படுத்தி அவர் துலாபாரம் நேர்த்திக்கடன் செலுத்தினார்.
அஷ்டமி ரோகினி நாளை ஒட்டி கோயில் சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அந்த நிகழ்ச்சியை கண்டு களித்துவிட்டு அங்கிருந்து ஓ.பன்னீர் செல்வம் புறப்பட்டார்.





