குடிநீர் தொட்டியில் சாணம் கலந்தது யார்? காவல்துறை பதில்
விருதுநகரில் அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் சாணம் கலந்தது மாணவர்கள் என காவல்துறை தெரியவந்துள்ளது. ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கூடம் நீர் தொட்டியில் இரண்டு மாணவர்கள் விளையாட்டுத்தனமாக சாணத்தை கலந்ததாக காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுபோன்ற அசம்பாவிதங்கள் நிகழாத வண்ணம் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களை கேட்டுக்கொள்வதாகவும் விருதுநகர் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
புதிய குடிநீர் தொட்டியை பாதுகாப்பான இடத்தில் அமைக்க வருவாய்த்துறை மூலம் நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
முன்னதாக புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவையல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த வழக்கில் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.





