சிறு வயதில் காணாமல் போன மகள் 9 ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைப்பு..!
காணாமல் போன சிறுமி 9 ஆண்டுகளுக்குப் பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம் நல்லூர் கிராமத்தில் பெற்றோரிடம் வசித்து வந்த சிறுமி சிறுவயதில் காணாமல் போனார்.
பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்து எங்கேயோ தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. இந்நிலையில் ஒரு காப்பகத்தின் தங்கி இருந்த சிறுமி என்ற ப்ரியாவை போலீசார் மீட்டனர்.
தற்பொழுது அவர் 10ம் வகுப்பு வரை படித்திருக்கிறார். வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் முன்னிலையில் வள்ளியை பெற்றோரிடம் சிறுமியை மீட்டு குழுவினர் ஒப்படைத்தனர்.
காணாமல் போன மகள் 9 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்திருப்பது தங்களுக்கு மகிழ்ச்சி அளித்திருப்பதாக பெற்றோர் தெரிவித்தனர். பெற்றோர் இன்றி சிரமப்பட்டு தனக்கு பெற்றோர் கிடைத்து விட்டதாக மல்லியும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.






