ஆசிரியர் முகத்தில் குத்திய குட்கா இளைஞர்..!
சென்னை திருவொற்றியூர் விம்கோ அரசு பள்ளியில் சேகர் என்பவர் பதினோராம் வகுப்பு ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இதே பள்ளியில் படித்து வந்த 17 வயது மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை எடுத்து ஊர் சுற்றி வந்துள்ளார்.
இது தொடர்பாக பெற்றோரிடம் ஆசிரியர் சேகர் புகார் கூறியுள்ளார். இதை தொடர்ந்து நேற்று பள்ளிக்கு வந்த மாணவர் மாவா என்னும் குட்கா பொருளை வாயில் போட்டு எச்சிலை வகுப்பறையில் துப்பி உள்ளார்.
இதையடுத்து ஆசிரியர் சேகர் தலைமை ஆசிரியரிடம் புகார் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவன் ஆசிரியர் சேகரை முகத்தில் குத்தியுள்ளார். காயமடைந்த ஆசிரியர் அப்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.






