--- --:--:-- --

வீடியோ எடுக்க யானையை தொந்தரவு செய்த இளைஞர்..!

3

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் வனப்பகுதியில் காட்டு யானையை வீடியோ எடுத்து தொந்தரவு செய்ததாக இருவருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

 

மிக அருகில் சென்று புகைப்படம் எடுத்து யானையை விரட்டியதோடு மீண்டும் தொந்தரவு செய்ததாக அங்கிருந்து அவர்கள் வீடியோ ஆதாரத்துடன் வனத்துறையிடம் புகார் அளித்தனர்.

 

அதனடிப்படையில் விசாரணை நடத்திய வனத்துறையினர் கேரளாவை சேர்ந்த இருவரையும் பிடித்து பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்ததோடு எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

 

Right Menu Icon