--- --:--:-- --

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு – தமிழிசை சௌந்தரராஜன் அறிவிப்பு

2

புதுச்சேரி மாநிலத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு ஒப்படைத்துள்ளதாக ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

 

புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான திமுக தீர்மானத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

 

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தீர்மானத்திற்கு ஒப்புதல் இல்லை. பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்தார்.

 

இதன் மூலம் அரசு கல்லூரியில் பயிலும் ஏழை பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவு நினைவாகும் என்றும் அவர் கூறினார். இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில் இட ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் கிடைத்ததை தொடர்ந்து இதற்கு விண்ணப்பிக்க அரசு பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் அதன் பிறகு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடத்தப்படும் எனவும் தெரிவித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon