பேருந்து நிலையத்தில் காத்திருந்த முதியவர் மேல் விழுந்த கான்கிரீட் மேற்கூரை..!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பேருந்து நிலையத்தில் ராமலிங்கம் என்ற 70 வயதான முதியவர் பேருந்துக்காக காத்திருந்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாக பேருந்து நிலையத்தின் மேற்கூரை கான்கிரீட் பெயர்ந்து விழுந்தது.
இந்த விபத்தில் முதியவர் ராமலிங்கம், மாணவி ஒருவரும் காயமடைந்தனர். இருவருக்கும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பேருந்து நிலையத்தை முறையாக பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது
📱 Share on WhatsApp 𝕏 Share on X





