ஜி-20 மாநாட்டில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் பங்கேற்பு..!
பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசிய ரஷ்ய அதிபர் மிலாடி புதின் ஜி 20 துறை அமைச்சர் பங்கேற்பார் என தெரிவித்துள்ளார். ஜி 20 நாடுகளின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளதால் அடுத்த மாதம் 9 மற்றும் 10 ஆகிய இரண்டு நாட்கள் ஜி-20 மாநாடு நடைபெற உள்ளது.
இதில் ரஷ்யா அதிபர் பங்கேற்க மாட்டார் என ஏற்கனவே செய்திகள் வெளியானது. இது குறித்து ரஷ்ய அதிபர் பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் நேற்று பேசினார்.
அப்பொழுது சில காரணங்களால் தங்கள் மாநாட்டில் பங்கேற்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளதால் தனக்கு பதிலாக ஜி 20 மாநாட்டில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் பங்கேற்பார் என தெரிவித்துள்ளார். மேலும் சந்திராயன் 3 திட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.





