மலையில் கிடைத்த பித்தளை சொம்பில் இருந்த நாணயங்கள்..!
ஆந்திர மாநிலம் நெல்லூரில் பழங்கால தங்க நாணயங்களை பெற்று கா,ர் ஆட்டோ வாங்கிய இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர். சித்திபள்ளி கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் மலைக்குன்றின் மீது தேன் எடுக்க சென்ற பொழுது அவர்களுக்கு பித்தளை சொம்பு ஒன்று கிடைத்துள்ளது.
அதில் பழங்கால நாணயங்கள் இருந்ததால் அதனை விற்று கார், ஆட்டோ வாங்கியுள்ளனர். தங்க நாணயங்களை எடுக்கும்பொழுது உடன் இருந்த மேலும் இருவரை அந்த இளைஞர்களும் மிரட்டி வீட்டிற்கு அனுப்பி விட்டனர். விரட்டப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் கொடுத்த தகவலின் அடிப்படையில் மூவர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் பழங்கால நாணயங்களை விற்றது உறுதி செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 14 லட்சம் ரூபாய் தங்க நாணயங்கள், கார், ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் மலை குன்றில் புதையல் இருக்கலாம் என நினைத்து யாரேனும் அந்த பகுதியில் தோன்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





