--- --:--:-- --

இந்தியா – சீனா இடையிலான பிரச்சினை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடிவு..!

3

கிழக்கு லடாக் பகுதியில் எல்லை கட்டுப்பாடு கோடு தொடர்பான கருத்து வேறுபாடுகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்திய, சீன ராணுவ அதிகாரிகள் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் முடிவு செய்யப்பட்டது.

 

இந்தியா – சீனா ராணுவ அதிகாரிகளாலும் அளவிலான 19 ஆவது கட்ட பேச்சு வார்த்தை கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்தது. இதையடுத்து இரு தரப்பும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் எல்லைக்கோடு பிரச்சனை தொடர்பாக இருதரப்பும் ஆக்கபூர்வமான வகையில் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இருநாட்டு தலைவர்கள் அளித்த அறிவுரைகளின்படி இருதரப்பிற்கும் பெயர் கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். ராணுவ அதிகாரிகள் அளவிலான பேச்சு வார்த்தை இரண்டு நாட்களாக நடைபெற்று வருவது.

 

இந்தியா – சீனா ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சு வார்த்தை இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள எல்லைப் பகுதியில் ஆகஸ்ட் 13 மற்றும் 14ஆம் தேதி நடைபெற்றது. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் வரை எல்லை பகுதியில் அமைதியை நிலை நிறுத்த இரு நாடுகளும் ஒப்பு கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon