--- --:--:-- --

4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை.. பள்ளி நடன ஆசிரியர் கைது..!

2

சென்னையில் தனியார் பள்ளியில் பயிலும் 4 வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பள்ளியின் நடன ஆசிரியர் போசோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

தனியார் பள்ளியில் நடன ஆசிரியராக உள்ள வேணுகோபால் என்பவர் பள்ளியில் பயிலும் நான்கு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இது பற்றி குழந்தையின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வேணுகோபாலை கைது செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

இதனிடையே குற்றச்சாட்டு குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் வேணுகோபாலை பள்ளிக்கு வரவழைத்து விசாரித்த பொழுது குழந்தையின் உறவினர்கள் வேணுகோபாலை தாக்கிய காட்சிகள் வெளியாகியுள்ளன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon