வெள்ளையூர் சுதந்திர தின விழா திமுக மேயர் பேச தொடங்கியதும் வெளியேறிய உறுப்பினர்கள்..!
நெல்லை மாநகராட்சியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்ற மாமன்ற உறுப்பினர்கள் மேயர் பேச தொடங்கியதும் அங்கிருந்து புறப்பட்டு சென்றது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
55 வார்டுகள் கொண்ட நெல்லை மாநகராட்சியில் திமுக கூட்டணியினர் 53 வார்டுகளில் 51 வார்டுகளில் வெற்றி பெற்ற திமுகவை சேர்ந்த சரவணன் மேயராக உள்ளார். மேயருக்கும், மாவட்ட உறுப்பினர்களுக்கும் இடையே ஏற்கனவே மோதல் போக்கு நிலவுகிறது.
இந்நிலையில் மாநகராட்சி வ வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மேயர் சரவணன் தேசிய கொடியை ஏற்றினார். இந்த நிகழ்ச்சிகளில் மாமன்ற உறுப்பினர்களும் ஊழியர்களும் பங்கேற்றனர்.
விழாவில் மேயர் பேச தொடங்கியவுடன் திமுகவை சேர்ந்த கவுன்சிலர்கள் உள்ளிட்ட 40க்கும் அதிகமான கவுன்சிலர்கள் இடத்தை காலி செய்து வெளியேறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





